கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு

அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானே வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

பெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில் பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம் ஏற்படலாம். இதைத் தடுத்திட, பாதி இடம் கம்பிவலைச் சட்ட அமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்கு 2 சதுர அடி இடவசதியும், ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் போதுமானது. முடிந்த அளவிற்கு வளர்ந்த வான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம். கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்
கம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கான வான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5 தாது  உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும். இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும். மேலும் முட்டையிடக்கூடிய பகுதி ஆழ்கூளமாக இருப்பது சிறந்தது. அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும். சுத்தமான ஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெற முடியும். சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில் வைத்திட இயலும்.

அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்

இவ்வவை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும் , பெட்டடைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை , பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்கபட பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.

Board breasted bronze

அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி

இந்த இரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின்  கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 முதல் 9 கிலோ எடை வரையும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 முதல் 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.

Board breasted white

பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை

அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப்பட்டன. இவ்வகை வான்கோழிகள்ப் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும், வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.

Beltsville small white

வான்கோழித் தீவனப் பராமரிப்பு

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு.

1. தண்ணீர்
2. மாவுப்பொருள்
3. புரதம்
4. கொழுப்பு
5. நார்ப்பொருள்
6. தாது உப்புக்கள்
7. உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)