வான்கோழி பராமரிப்பு முறைகள்

நாட்டுக் கோழிகள் அல்லது வான்கோழிகள் மூலமாகக் குஞ்சுகள் பொரித்திருந்தால் தாய்க்கோழிகளே தம் குஞ்சுகளுக்குத் தீவனத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்து விடும். தன்னுடைய காலால் கிளறி, தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதை பார்த்துக் குஞ்சுகளும் தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்து குஞ்சுகளும் தானியங்களை சாப்பிடப் பழகிவிடும்.

turky incubation
அடைகாத்தல்

இயந்திரங்கள் மூலமாகப் பொரிக்கப்படும் குஞ்சுகளை கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது போல் அடைக்காப்பான் அமைத்து மின்சார குண்டு விளக்கைப் பொட்டு தரையில் உமியிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பிவிட்டு அதன் மேல் குஞ்சுகளை விடலாம். திறந்த தட்டுக்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்திட வேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்து விட வேண்டும். இளம்குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் அளித்திடவேண்டும். தாய்க்கோழி எந்த அளவிற்கு வெப்பத்தைத் தன் குஞ்சுகளுக்கு தேவைப்படும் பொழுது அளிக்கிறதோ அந்த அளவிற்கச் செயற்கையாக வெப்பம் அளித்திடவேண்டும்.

நான்கு தீவனத்தட்டுகள், நான்குத் தண்ணீர்த் தட்டுகள் வைத்திடவேண்டும்.  வெப்பம் அளித்திட 100 வாட் மின்விளக்கு நான்குத் தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் தொங்கும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு 2 அடி நீளமுள்ள இரண்டு மரப்பலகைகளை அல்லது பிளாஸ்டிக் பைப்களை எடுத்துக் கொண்டு கூட்டல் குறி வடிவத்தில் (+) பொருத்திக் கொள்ளலாம். ஓரங்களில் மின்விளக்கு பொருத்தக்கூடிய வகையில் மின் இணைப்பு கொடுக்கவேண்டும். இந்தக் கூட்டல் குறி வடிவ அமைப்பினைக் கயிற்றால் கட்டித் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானுக்குள் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் தொங்கும்படி விடலாம். இரு கட்டைகளின்  நான்கு முனைகளிலும் மின்விளக்குகளைப் பொருத்தி மின்இணைப்பு கொடுத்து எரிய விடலாம். இரண்டு மின்விளக்குகளுக்கு ஒரு சுவிட்சு என்றக் கணக்கில் அமைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது நான்கு மின் விளக்குகளையும் எரிய விடலாம். அல்லது இரண்டு மின் விளக்குகளை அணைத்து விடலாம். இந்த அமைப்பினைத்  தான் ‘அடைகாப்பான்’ என்று அழைக்கின்றோம். இதை ஆங்கிலத்தில் ‘புருடர்’ என்று அழைக்கின்றோம்.

இந்த புருடருக்குள் வான்கோழி, குஞ்சுகள் பொரித்த நாளிலிருந்து  சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை வளர்க்கலாம்.  வெயில் காலமாக இருந்தால் செயற்கையாக மின்விளக்குகள் மூலமாக அளிக்கப்படும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது 2 மின்விளக்குகள் மட்டும் எரிய விடலாம். மழைக்காலமாக இருந்தால் 4 மின்விளக்குகளையும் எரியவிடலாம். பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருந்தால் மின்விளக்குகளை அணைத்து விடலாம். இதைக் கண்டறிவது மிகவும்  எளிது. உஷ்ணம் புருடரில் போதவில்லையெனில் எல்லாக் குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கும். அப்பொழுது சூட்டை அதிகப்படுத்திடவேண்டும். செயற்கை வெப்பம் அதிகமாக இருந்தால் அடைக்காப்பானின் ஓரத்திற்குச் சென்று விடும். சுறுசுறுப்பற்ற நிலையுடன் காணப்படும். மின்விளக்குகளுக்கு அடியில் வருவதற்கு தயங்கும். இதை உற்றுக் கவனித்தால் போதுமான சூடு அடைகாப்பானில் இருக்கிறதா இல்லையா   என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும. தாய்க்கோழி அளிக்கும அளவிற்கே சூடு கொடுத்திட வேண்டும்.

turkey brooding
புருடருக்குள் வான்கோழி குஞ்சுகள்

குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளருவதற்கு பொரித்த நாளிலிருந்து சுமார் 3 வார காலமாகும். அதுவரை தன்னுடைய உடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி பறவையினத்திற்கு கிடையாது. அதற்காகத் தான் செயற்கை முறையில் வெப்பத்தை அளித்து வளர்க்கச் செய்கிறோம். அடைகாப்பான் பொருத்துவது தாய்க்கோழியின் அரவணைப்பில் இருப்பது  போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். வான்கோழிக் குஞ்சுகள் மிகக் குறைந்த காலத்தில் அதிக எடை பெறுவதால் அதனுடைய 2வது வார வயதிற்குள் உடல் முழுவதும் இறகுகள் வளர்ந்து விடும்.

ஆழ்கூள முறையில் வளர்க்கும் சமயத்தில் இரண்டாவது வாரத்திற்குப் பறிகு அதாவது 10 முதல் 14வது நாளுக்குப் பின் அடைகாப்பானை நீக்கிவிட்டு ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி இடவசதி அளித்து வளர்க்கலாம். வான்கோழிக் குஞ்சுகள் மூன்று வார வயதிலிருந்து சுமார் ஐந்து வார வயதை அடையும் வரை படிப்படியாக  இடவசதியை அதிகரித்து ஒரு சதுர அடி இடவசதியும் அதற்குப்பின் 8 வார வயதினை அடையும் சமயத்தில் 2 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்கவேண்டும். இடவசதி குறைவாகக் கொடுத்தால் ஆழ்கூளம் ஈரமாகிவிடும். மேலும் பல நோய்ப்பிரச்சினை ஏற்படும்.

This entry was posted in வான்கோழி வளர்ப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>